கோவையில் 6 பேர் பலியான சம்பவம் குடிபோதையில் டிரைவர் காரை ஓட்டியது அம்பலம்
கோவையில் பயணிகள் கூட்டத்துக்குள் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று 6 பேர் பலியாக காரணமாக இருந்த கார் டிரைவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கோவை,
கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த சொகுசு கார் கூட்டத்தில் புகுந்து 6 பேர் உயிரை பலி வாங்கியது. தனியார் கல்லூரிக்கு சொந்தமான இந்த காரை டிரைவர் ஜெகதீசன் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து மேலும் 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பயங்கர விபத்தில் சுந்தராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி (வயது 18), பூ வியாபாரி அம்சவேணி(34), ரேஷன் கடைக்கு சென்ற குப்பாத்தாள் (70), ருக்மணி (65), ஓய்வு பெற்ற தபால்காரர் நாராயணன் (70), சுமை தூக்கும் தொழிலாளி ஸ்ரீரங்கதாஸ் (69) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
விபத்தில் காயமடைந்த சுந்தராபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம் (55), சுரேஷ் (45), நடராஜ் (75) ஆகிய 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடைபெறுவதற்கு முன்தினம் டிரைவர் ஜெகதீசன் பெங்களூருவுக்கு காரில் சென்று திரும்பி உள்ளார். விடிய, விடிய தூங்காமல் கார் ஓட்டிய அவர் மறுநாள் காலையிலும் கல்லூரி நிர்வாகியை அழைத்து வர பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து கோவை வரும்போதுதான் இந்த விபத்து நடைபெற்றது. கார் டிரைவர் ஜெகதீசன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறியதாவது:-
இதுபோன்ற கொடூர விபத்து கோவையில் இனியும் நடைபெறக்கூடாது என்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கார் டிரைவர் ஜெகதீசன் குடிபோதையில் இருந்ததை டாக்டர் முன்னிலையில் ஒப்புக்கொண்டு உள்ளார். இதுகுறித்து டாக்டர்கள் ஒப்புதல் சான்றிதழ் வழங்கி உள்ளனர். ரத்த மாதிரி எடுத்தும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஜெகதீசன் மீது ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
304(2) உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்தல், 337 (உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கவனக்குறைவாக செயல்படுதல்), 338(கடும் காயத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல்), 279 (அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டுதல்) ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குடிபோதையில் காரை ஓட்டிச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 183(அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்), 184(அபாயகரமாக ஓட்டுதல்), 185 (குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது) ஆகிய மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. கைதான டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
304 (2) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் குறைந்த பட்சம் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே டிரைவர் ஜெகதீசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதன்தொடர்ச்சியாக விதிமுறைகளின்படி ஜெகதீசனிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் அவர் எழுத்து பூர்வமாக வேறு யார் மூலமாவது விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கம் எப்படி இருந்தாலும் ஜெகதீசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவது உறுதி என்று கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ராஜூ தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story