கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ரெயில்வே பாதை

மதுரை-கன்னியாகுமரி இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில்பட்டி காந்திநகர், இந்திராநகர், சீனிவாசநகர், அத்தைகொண்டான் ஆகியவற்றின் தென்பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகில் காம்பவுண்டு சுவர் கட்டப்பட உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களுக்கு ரெயில் தண்டவாளங்களைக் கடந்து செல்லும் வகையில், மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகன், நகர குழு உறுப்பினர் சக்திவேல் முருகன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி, நகர செயலாளர் வசந்தி, ஆனந்த், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி கலெக்டர் விஜயா, அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். எனவே உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூர்யகலாவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த...

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இதன் அருகில் உள்ள 50 சென்ட் அரசு நிலத்தை ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து கோவில் கட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

Next Story