திருவாரூர்-கொரடாச்சேரி இடையே கமலாபுரம் வழியாக அரசு பஸ் இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு
திருவாரூரில் இருந்து கமலாபுரம் வழியாக கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதை பொதுமக்கள் வரவேற்றனர்.
கொரடாச்சேரி,
திருவாரூரில் இருந்து கமலாபுரம் வழியாக முசிரியம் என்ற ஊருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சை கொரடாச்சேரி வரை இயக்க வேண்டும் என கமலாபுரம், முசிரியம், விடயபுரம், கண்கொடுத்தவணிதம், திட்டாணிமுட்டம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் ஆர்.காமராஜ், அந்த பஸ்சை திருவாரூரில் இருந்து கமலாபுரம் வழியாக கொரடாச்சேரி வரை இயக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார். அதன்படி அந்த பஸ் கொரடாச்சேரி வரை இயக்கப்பட்டது.
முசிரியத்தில் இருந்து கொரடாச்சேரி புறப்பட்டு சென்ற அரசு பஸ்சை கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று, வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பஸ்சின் டிரைவர், கண்டக்டருக்கு கிராம மக்கள் சார்பில் துண்டு அணிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story