மகள் காதல் திருமணம் செய்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை நாசரேத்தில் சோகம்


மகள் காதல் திருமணம் செய்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை  நாசரேத்தில் சோகம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்த வியாபாரி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாசரேத்,

மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்த வியாபாரி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பழைய இரும்பு வியாபாரி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 59). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு காளீசுவரி, ஈசுவரி ஆகிய 2 மகள்களும், பால்ராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மாள் இறந்ததால், சந்திரிகா என்பவரை முருகேசன் 2–வதாக திருமணம் செய்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக காளீசுவரி, திருவனந்தபுரத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அதே கடையில் வேலை செய்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதலித்து திருமணம் செய்ததால் முருகேசன் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நாசரேத்தில் இருந்து வெள்ளரிக்காயூரணி செல்லும் வழியில் புதுக்குளம் கரையோரம் நேற்று முருகேசன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்த நிலையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து உடனடியாக நாசரேத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், நாசரேத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முருகேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story