நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு முன்கூட்டியே விலை நிர்ணயம்
நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்து இன்கோசர்வ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதனை நம்பி 65-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும் இருக்கின்றனர். தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் அந்தந்த பகுதி விவசாயிகள் வழங்கி வருகின்றனர். அவ்வாறு வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இதனிடையே தற்காலிகமாக மாவட்ட கலெக்டர் தலைமையிலான விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் பச்சை தேயிலை கிலோவுக்கு 12 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகள் அந்த விலையை விட ரூ.3 முதல் ரூ.4 வரை குறைத்து கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ஏஜெண்டுகள் விலையை கூடுதலாக தருவதால், கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலையை வழங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் முன்கூட்டியே கைகாட்டி கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 என கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பச்சை தேயிலை வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனை கருத்தில் கொண்டு மற்ற கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கும் முன்கூட்டியே குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய குன்னூர் இன்கோசர்வ் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பின்வருமாறு விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு(பச்சை தேயிலை விலை கிலோவில்):-
சாலீஸ்பரி தொழிற்சாலையில் ரூ.13, மஞ்சூர் மற்றும் கரும்பாலம் ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.12, பந்தலூர் மற்றும் பிராண்டியர் ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.11.50, எடக்காடு, மேற்குநாடு, மகாலிங்கா, இத்தலார், பிக்கட்டி, கிண்ணக்கொரை, நஞ்சநாடு, எப்பநாடு, பிதிர்காடு ஆகிய தொழிற்சாலைகளில் ரூ.11 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பச்சை தேயிலைக்கு முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story