ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கோர்ட்டில் சரண்
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி தெற்கு குளக்கரை, முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30). ஆட்டோ டிரைவர், இவரது துண்டிக்கப்பட்ட தலை கடந்த 29-ந் தேதி ஊரப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் கிடந்தது. இதனை கைப்பற்றிய கூடுவாஞ்சேரி போலீசார் உடலை பல்வேறு பகுதியில் தேடி வந்தனர்.
30-ந் தேதி காலையில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் அருகே உள்ள காலி மைதானத்தில் கமலக்கண்ணனின் உடல் கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சரண்
இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி அர்ஜுனன் தெருவை சேர்ந்த அண்ணன், தம்பியான கதிர்வேல் (வயது 39), குமரவேல் (35) ஆகியோர் நேற்று தாம்பரம் குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:-
தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்த கதிர்வேல், குமரவேல், இருவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய உள்ளோம், இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு தான் எந்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் கமலக் கண்ணன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story