கோவை மாநகராட்சி பகுதியில் பழுதான சாலையை சீரமைக்க நவீன எந்திரம் வாங்க முடிவு
கோவை மாநகர பகுதியில் பழுதான சாலையை சீரமைக்க நவீன எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாநகர பகுதியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. 100 வார்டுகளிலும் சாலைகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால், பெரும்பாலான இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதால், அங்கு இருக்கும் குழிகள் தெரிவதில்லை. இதனால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நவீன எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த எந்திரத்தின் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் திருவேங்கடசாமி சாலை, சர்சண்முகம் சாலை சந்திப்பில் நவீன எந்திரம் மூலம் தார்தளம் ஒட்டும் பணி மாதிரி செயல் விளக்கம் நடைபெற்றது. அதை மாநகராட்சி தனி அதிகாரி விஜய கார்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:-
சாலை பழுதடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளித்தால், அதில் ஜல்லி, தார் கொட்டி சரிசெய்யப்படும். அப்போது அந்த இடத்தில் மட்டும் மேடாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். வெளிநாடுகளில் பழுதான சாலையை நவீன எந்திரம் மூலம் சரிசெய்கிறார்கள். இதனால் அந்த இடத்தில் பள்ளம் மேடு இல்லாமல் ஒரே சீராக இருக்கும்.
அதுபோன்று கோவையிலும் சாலைகளை சரிசெய்ய நவீன எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த எந்திரம் சாலை பழுதான இடத்தில் ஜல்லி மற்றும் தாரை சேர்த்து கலவை செய்து அதில் கொட்டி அழுத்தம் கொடுக்கிறது. இதனால் அந்த இடம் பள்ளம், மேடு தெரியாமல் சமமாக மாறி விடுகிறது. இதன் மூலம் குறைந்தது 3 வருடங்களுக்கு அந்த இடத்தில் பழுது ஏற்படாது. எனவே கோவைக்கு இதுபோன்று எந்திரங்கள் வாங்குவது ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story