விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் ராசிபுரத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் ராசிபுரத்தில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோழிகளுக்கு ஊசி போட்டு வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ராசிபுரத்தில் இருந்து குருசாமிபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் சென்றபோது எதிரே வந்த அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி (வயது 40) ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் விபத்து இழப்பீடு தொகை வழங்கும்படி சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாசந்திரன் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் விபத்து இழப்பீடு வழங்கும்படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
அரசு போக்குவரத்து கழகம் விபத்து இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததையடுத்து மீண்டும், அசல் மற்றும் வட்டியுடன் ரூ.12 லட்சத்து 89 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படி கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நிறைவேற்று மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். ஆனாலும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.
இதையடுத்து அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மாலையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராசிபுரம் டெப்போவைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
அதேபோல் ராசிபுரம் அருகேயுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் வசித்தவர் அசோகன். இவர் சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி சேலத்திற்கு செல்வதற்காக ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் முன்பு சேலம் சென்ற அரசு பஸ்சில் ஏறினார். பஸ் வேகத்தடை மீது ஏறியபோது அசோகன் தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுபற்றி அசோகனின் மனைவி ஜெயலட்சுமி ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் விபத்து இழப்பீடு தொகை வழங்கும்படி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாசந்திரன் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி ரூ.8 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கும்படி உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி அரசு போக்குவரத்து கழகம் விபத்து இழப்பீட்டு தொகையை ஜெயலட்சுமிக்கு வழங்கவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அசல், வட்டியுடன் விபத்து இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று ஜெயலட்சுமி நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். இழப்பீடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சேலம் செல்வதற்காக நின்ற அரசு போக்குவரத்து கழக ராசிபுரம் டெப்போவைச் சேர்ந்த டவுன் பஸ்சை நேற்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Related Tags :
Next Story