பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மின்வினியோகத்தில் பிரச்சினை ஏற்படக் கூடாது அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு


பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மின்வினியோகத்தில் பிரச்சினை ஏற்படக் கூடாது  அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2018 5:00 AM IST (Updated: 3 Aug 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மின்வினியோகத்தில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு முதல்–மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மின்வினியோகத்தில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு முதல்–மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

பெங்களூருவில் மின் வினியோகத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்து முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நிதித்துறை முதன்மை செயலாளர் ஐ.என்.எஸ்.பிரசாத், மின்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரவிக்குமார், பெங்களூரு மின் வினியோக நிறுவன(பெஸ்காம்) நிர்வாக இயக்குனர் ராஜேந்திர சோழன், முதல்–மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மின்துறை, முதல்–மந்திரி குமாரசாமி வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பெங்களூருவின் மின்தேவை, தற்போது கிடைக்கும் மின்சார அளவு குறித்து முழு விவரங்களை குமாரசாமி கேட்டு அறிந்தார். இந்த கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:–

பிரச்சினை ஏற்படக்கூடாது

பெங்களூருவில் எக்காரணம் கொண்டும் மின் வினியோகத்தில் பிரச்சினை ஏற்படக்கூடாது. மின்கசிவு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் மின் வயர் பாதைகளை அமைக்க வேண்டும். முடிந்தவரை மரங்கள் வெட்டுவதை நிறுத்த வேண்டும்.

பெங்களூருவில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சார தேவை உள்ளது. மின் வினியோகத்தில் தடை ஏற்படாமல் இருக்க நிலத்திற்கு அடியில் மின் வயர்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினையை தீர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், பெங்களூரு மாநகராட்சி கமி‌ஷனர், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர், போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை கூட்டி தீர்வு காணப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.


Next Story