முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள ஹேமாவதி அணையில் கிறிஸ்தவ ஆலயம் முழுமையாக மூழ்கியது


முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள ஹேமாவதி அணையில் கிறிஸ்தவ ஆலயம் முழுமையாக மூழ்கியது
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள ஹேமாவதி அணையில் கிறிஸ்தவ ஆலயம் முழுமையாக மூழ்கியது.

ஹாசன்,

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள ஹேமாவதி அணையில் கிறிஸ்தவ ஆலயம் முழுமையாக மூழ்கியது.

ஹேமாவதி அணை

ஹாசன் தாலுகா கொரூர் பகுதியில் ஹேமாவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்தேக்கத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. முன்பு பிரசித்தி பெற்று இருந்த இந்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஹேமாவதி அணை நிரம்பும்போது எல்லாம், கிறிஸ்தவ ஆலயம் தண்ணீரில் மூழ்கிவிடும். தற்போது அந்த கிறிஸ்தவ ஆலயம் முழுவதுமாக சிதிலமடைந்து விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதிய மழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. இதனால், அந்த கிறிஸ்தவ ஆலயம் முழுமையாக வெளியே தெரிந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

கிறிஸ்தவ ஆலயம் மூழ்கியது

இந்த நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து ஹாசனில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,920 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஹேமாவதி அணை ஏறக்குறைய நிரம்பி விட்டது. இதன்காரணமாக அணையின் நடுவே உள்ள கிறிஸ்தவ ஆலயம் முழுமையாக தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.


Next Story