காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகம் அறிவிக்கப்படும் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் பேச்சு
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகம் அறிவிக்கப்படும் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகம் அறிவிக்கப்படும் என்று துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
மக்கள் பங்கேற்புசட்டம் மற்றும் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் தூய்மை கிராமங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்–மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
தூய்மையை ஏற்படுத்துவது என்பது அரசின் முன் இருக்கும் சவால் ஆகும். மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2–ந் தேதி கர்நாடகம் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும். துய்மை இந்தியா திட்டத்தை கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதுவரை 22 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வளவு கழிவறைகள் கட்டுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. தூய்மை இந்தியா திட்டத்தில் மக்கள் பங்கேற்பு என்பது மிக முக்கியமானது. குழந்தைகள் மூலம் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் சிறப்பானது. குழந்தைகள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களின் மனநிலையை மாற்றும்.
இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.
22 லட்சம் கழிவறைகள்இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:–
கர்நாடகத்தில் இதுவரை 20 மாவட்டங்கள் திறந்தவெளி கழிவறை இல்லாத மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் கழிவறைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 2–ந் தேதி திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக கர்நாடகம் அறிவிக்கப்படும்.
ஒருவேளை அக்டோபர் 2–ந் தேதிக்குள் கழிவறைகள் அமைக்கும் பணிகள் முடிவடையாவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும். கர்நாடகத்தில் இதுவரை 22 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் 1 லட்சம் கழிவறைகள் கட்டப்பட வேண்டும். தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகளை தூதுவர்களாக நியமித்துள்ளோம்.குழந்தைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். கிராமங்களில் கழிவறைகள் கட்டுவதுடன் குப்பைகளை சரியான முறையில் நிர்வகிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா பேசினார்.
இந்த கூட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளர் எல்.கே.அதீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.