சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு 20 அறைகள் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை நிறைவேறியது


சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு 20 அறைகள் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை நிறைவேறியது
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக 20 ஓய்வறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை, 

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொண்ட ஓய்வறைகள் கட்டுவதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ்பிரபுவிடம் கடந்த மே 10-ந்தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

தற்போது சென்னை விமானநிலையத்தில் நவீன முறையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வேளையில், சென்னைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக 20 ஓய்வறைகள் கட்டுவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட்டு விமான பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story