30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:45 AM IST (Updated: 3 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக கோட்டைக்கு சென்றனர். அங்கு தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

பேரணிக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.சிவகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பேரணியில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் பல போராட்டங்கள் செய்தபின் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோட்டையை நோக்கி பேரணி சென்று எங்கள் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story