வங்கி முன்பு மின்வாரிய ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ்
வத்தலக்குண்டுவில் வங்கி முன்பு மின்வாரிய ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு அருகே உள்ள எஸ்.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவர் குண்டலப்பட்டி துணை மின் நிலையத்தில் ஊழியராக உள்ளார். இவர் நேற்று மதியம் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகேயுள்ள ஒரு வங்கியில் ரூ.50 ஆயிரம் எடுத்தார்.
அதை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு, பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தார். அப்போது மோட்டார்சைக்கிள் ஸ்டார்ட் ஆகவில்லை. சற்று நேரம் முயற்சித்து பார்த்தும் முடியவில்லை.
பிறகு கீழே உட்கார்ந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது ஒரு பிளக் வயர் பிடுங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து எழுந்து நின்று பார்த்த போது மோட்டார்சைக்கிளின் பெட்டி திறந்து கிடந்தது. மேலும் உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து இளங்கோவன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story