விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வண்டலூர் பூங்காவுக்கு மைசூருவில் இருந்து புதிய விலங்குகள் வருகை


விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வண்டலூர் பூங்காவுக்கு மைசூருவில் இருந்து புதிய விலங்குகள் வருகை
x
தினத்தந்தி 2 Aug 2018 9:53 PM GMT (Updated: 2 Aug 2018 9:53 PM GMT)

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வண்டலூர் பூங்காவுக்கு மைசூருவில் இருந்து புதிய விலங்குகள் வந்துள்ளன.

வண்டலூர், 

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 ஜோடி கோடிட்ட கழுதைப்புலி, ஒரு ஆண் இந்திய காட்டுமாடு, ஒரு ஜோடி லேடி அம்ஹார்ஸ்ட் கோழி, ஒரு ஜோடி குள்ளநரி, ஒரு ஜோடி தங்க நிறக்கோழி, ஒரு ஜோடி சாரஸ் கொக்கு, ஒரு ஜோடி கருப்பு அன்னம், ஒரு ஜோடி ஈகிளக்டஸ் கிளி போன்றவை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு பதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி வெள்ளைப்புலிகள், ஒரு ஆண் இந்திய காட்டு மாடு, ஒரு ஆண் சிங்கவால் குரங்கு மற்றும் ஒரு ஜோடி நீலகிரி கருங்குரங்குகள் ஆகியவை மைசூரு ஸ்ரீ சாமராஜேந்திரா உயிரியல் பூங்காவிற்கு வழங்கப்பட உள்ளது.

மருத்துவர்களின் கண்காணிப்பில்

மைசூருவில் இருந்து பெறப்பட்ட விலங்குகள் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மருத்துவர்களின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பூங்கா மருத்துவர்கள் விலங்குகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மூன்று வார மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு விலங்குகள் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story