கடந்த ஆண்டில் மட்டும் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடி அபராதம் வசூல் பெஸ்ட் குழுமம் நடவடிக்கை
கடந்த ஆண்டில் மட்டும்மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடி அபராதம் வசூலித்து பெஸ்ட் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை,
கடந்த ஆண்டில் மட்டும்மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடி அபராதம் வசூலித்து பெஸ்ட் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.13 கோடி அபராதம் வசூல்
மும்பையில் மாநகராட்சியின் பெஸ்ட் குழுமம் தவிர ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற தனியார் நிறுவனங்களும் மின் வினியோகம் செய்து வருகின்றன. மும்பையில் அதிகளவு நடைபெறும் மின் திருட்டு காரணமாக மின்சார நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே மின்நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு மின்திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதில், கடந்த ஆண்டில் மட்டும் பெஸ்ட் குழுமம் மின்திருட்டில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மின்திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடியை அபராதமாக பெஸ்ட் குழுமம் வசூல் செய்துள்ளது.
விழாக்காலங்களில் அதிகம்
இது குறித்து பெஸ்ட் குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மும்பையில் கோடை மற்றும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்காலங்களில் அதிகளவு மின்திருட்டு நடக்கிறது. குடிசைப்பகுதிகள் மட்டும் இன்றி மலபார்ஹில், வடலா, மாகிம், பைகுல்லா போன்ற இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மின்திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story