கடன் தொல்லையால் தாய், மனைவி, மகளை கொன்றவருக்கு சாகும் வரை சிறை புனே கோர்ட்டு தீர்ப்பு
கடன் தொல்லையால் தாய், மனைவி, மகளை கொலை செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து புனே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
புனே,
கடன் தொல்லையால் தாய், மனைவி, மகளை கொலை செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து புனே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கடன் தொல்லை
புனே ஜாம்புல்கர்மாலா பாத்திமா நகரை சேர்ந்தவர் சாகர் (வயது44). இவரது மனைவி கவிதா(34). இவர்களுக்கு இசிதா என்ற மகள் இருந்தாள். இவர்களுடன் சாகரின் தாய் சகுந்தலாவும் வசித்து வந்தார். சாகர் வேலையில்லாமல் இருந்து வந்தார். இதனால் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார்.
மேலும் வட்டிக்கு பலரிடம் அதிகளவில் கடன் வாங்கி இருந்து உள்ளார். அந்த கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் தவித்த அவர், குடும்பத்தினரை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
ஆயுள் தண்டனை
அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி மனைவி, மகள் மற்றும் தாய்க்கு அதிகளவில் தூக்க மாத்திரைகளை கொடுத்து, அவர்கள் மயங்கியதும் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் தனது தற்கொலை முடிவை கைவிட்டார். இரவு முழுவதும் 3 பேரின் உடல்களுடனும் வீட்டில் தங்கியிருந்த அவர், மறுநாள் போலீஸ் நிலையம் சென்று சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, புனே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் தீர்ப்பு கூறிய கோர்ட்டு, சாகருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story