சீர்காழியில், அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில்


சீர்காழியில், அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி, 


நாகை மாவட்டம், சீர்காழி அருகே எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர், கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்தக்காரராகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தசம்பவம் தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு கோலியத்தெரு உபகாரசாமி மகன் எமர்சன் என்கிற பிரசன்னா (25), சீர்காழி குலத்திங்கநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் குலோத்துங்கன் (34), தஞ்சை மாவட்டம் திருவையாறு அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த ரெத்தினம் மகன் குணா என்கிற குணசேரகன் (30) ஆகிய 3 பேரையும் சீர்காழி போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்த பின்னர் போலீசார், மேற்கண்ட 3 பேரையும் நேற்று முன்தினம் இரவு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார். வழக்கு தொடர்பாக தமிழரசன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலம்பரசன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story