வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை


வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை
x
தினத்தந்தி 4 Aug 2018 4:00 AM IST (Updated: 4 Aug 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரம் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

புதுச்சேரி,

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இயக்குவது குறித்த பயிற்சி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலரின் கலந்தாய்வு கூடத்தில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பயிற்சியை புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தொடங்கி வைத்தார். புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சவுத்ரி அபிஜித் விஜய், காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி கேசவன், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுப்குமார், மாதங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு எந்திரங்களை இயக்குவது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார், துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 70–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story