தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை சென்னை கலெக்டர் எச்சரிக்கை


தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை சென்னை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2018 2:13 AM IST (Updated: 4 Aug 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

1971-ம் ஆண்டு நாட்டின் நற்பெயர் அவமதிக்கப்படுதலை தடுத்தல் சட்டம், 2005-ம் ஆண்டு நாட்டின் நற்பெயர் அவமதிக்கப்படுதலை தடுத்தல் (திருத்த சட்டம் 51/2005) மூலம் திருத்தப்பட்டது மற்றும் 2002-ம் ஆண்டு இந்திய தேசிய கொடி விதிக்கோவையின் வழிவகைகள் வருமாறு:-

* பொது இடத்தில் அல்லது ஏனைய யாதொரு இடத்தில் பொதுமக்களின் பார்வையில் தேசிய கொடி, இந்திய அரசமைப்பு சட்டம், அதனுடன் தொடர்புடைய பகுதியை எரித்தல், சிதைத்தல், தோற்றத்தை கெடுத்தல், மாசுபடுத்துதல், உருக்குலைய செய்தல், அழித்தல், மிதித்தல் ஏனைய வகைகளில் அவமதிக்கிற, புறக்கணிக்கிற செயல்களில் யாரும் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது மேற்சொன்ன இவ்விரு வகையான தண்டனை விதிக்கப்படும்.

* தேசிய, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். அத்தகைய காகிதத்திலான கொடிகளை நிகழ்ச்சி முடிந்தபின்னர், தரையில் போடக்கூடாது அல்லது தூக்கி எறியக்கூடாது. தேசிய கொடி உரிய கண்ணியத்துடன் தனியாக தீர்வு செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story