தொழில் அதிபரின் சொகுசு காரை திருடிய 2 பேர் கைது


தொழில் அதிபரின் சொகுசு காரை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2018 2:19 AM IST (Updated: 4 Aug 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரின் சொகுசு காரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

கோவையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்குமார். தொழில் அதிபரான இவர் தொழில் ரீதியாக அடிக்கடி தனது பென்ஸ் காரில் சென்னை வருவார். தியாகராயநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்குவார்.

அவ்வாறு தங்கும் போது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி இருந்த ஸ்ரீராம்குமாரின் பென்ஸ் கார் திருட்டு போய் விட்டது.

2 பேர் கைது

இதுபற்றி மாம்பலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீராம்குமாரின் சொகுசு காரை திருடியதாக திரு.வி.க.நகரை சேர்ந்த சாகுல் அமீது (வயது 38), ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி (36) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பென்ஸ் கார் மீட்கப்பட்டது.

Next Story