சட்டவிரோத விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் உத்தரவு


சட்டவிரோத விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் உத்தரவிட்டார்.

பெங்களூரு,

சட்டவிரோத விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சம்பத்ராஜ் உத்தரவிட்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் நேற்று மகாதேவபுரா பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். வர்த்தூர் ஏரி பகுதியில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். அந்த பணிகளை விரைவாக செய்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனே அகற்றும்படி அதிகரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபற்றி மேயர் சம்பத்ராஜ் கூறியதாவது:–

இந்த பகுதியில் உரிய அனுமதி பெறாமல் அதிகளவில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், மாநகராட்சி நிர்வாகம் அவர்களுடன் இருக்கும். அதிகாரிகள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

விளம்பர பலகைகள் இல்லாத நகரமாக...

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி சட்டவிரோத விளம்பர பலகைகள் இல்லாத நகரமாக பெங்களூரு மாற்றப்படும். நேற்று(அதாவது நேற்று முன்தினம்) விளம்பர பலகைகள் அகற்றும்போது அதிகாரிகள் மீது சிலர் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அத்தகையவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எக்காரணம் கொண்டும் சட்டவிரோத விளம்பர பலகைகளை வைக்க அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு மேயர் சம்பத்ராஜ் கூறினார்.


Next Story