கர்நாடகத்தில் 2-வது, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க அரசு சலுகை முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு


கர்நாடகத்தில் 2-வது, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க அரசு சலுகை முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நாட்கள் பெங்களூருவில் நடக்கிறது.

பெங்களூரு, 

பெங்களூரு தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நாட்கள் பெங்களூருவில் நடக்கிறது.

ஆலோசனை கூட்டம்

தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கம் புதுமையை புகுத்துதல் என்பது ஆகும். இதுகுறித்து தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் இன்போசிஸ் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

“கர்நாடகத்தில் 2-வது மற்றும் 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க கர்நாடக அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதிகளில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த நோக்கத்தில் அங்கு தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளையும் சலுகைகளையும் அளிக்க அரசு தயாராக உள்ளது. திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தனி பிரிவு ஏற்படுத்தப்படும்

இதற்காக பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தவிர்த்து பிற பகுதிகளில் தொழில் தொடங்க முன்வர வேண்டும். தொழில் நிறுவனங்களை தொடங்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற் காக முதல்-மந்திரி அலுவலகத்தில் ஒரு தனி பிரிவு ஏற்படுத்தப்படும். சீனாவின் திட்டங்களுக்கு போட்டி போடும் வகையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங் களில் தொழில் மையங்களை உருவாக்க எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள் ளது.

பீதரில் விவசாய உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமும், கலபுரகியில் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனங்களும், கொப்பலில் மின்னணு பொம்மை உற்பத்தி நிறுவனங்களும், பல்லாரியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களும், சித்ரதுர்காவில் எல்.இ.டி. பல்பு உற்பத்தி நிறுவனங்களும் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்க தயாராக உள்ளது.

புதுமையை புகுத்தும் மையமாக...

கர்நாடகம் புதுமையை புகுத்தும் மையமாக மாறியுள்ளது. கர்நாடக புதுமையை புகுத்துதல் ஆணையத்தை உருவாக்க தேவையான சட்டம் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். பெரிய நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய தயாராக உள்ளது.”

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

கூட்டத்தில் தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே, தொழில்துறை முதன்மை செயலாளர் கவுரவ் குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story