சார்ஜாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்திய ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல்


சார்ஜாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்திய ரூ.26 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Aug 2018 3:30 AM IST (Updated: 4 Aug 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்திய ரூ.26¼ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு, 

சார்ஜாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் உள்ளாடையில் மறைத்து கடத்திய ரூ.26¼ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளாடைக்குள் தங்க துகள்கள்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தார்கள். ஆனால் எந்த பயணிகளிடம் இருந்தும் தங்கம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த விமானத்தில் வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் மட்டும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று விமான நிலைய பெண் போலீசார் சோதனை செய்தார்கள். அப்போது அந்த பெண் அணிந்திருந்த உள்ளாடைக்குள் தங்க துகள்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த ஷாகினா சேக்(வயது 36) என்று தெரிந்தது.

ரூ.26¼ லட்சம் மதிப்பு

மேலும் அவர், தங்கத்தை துகள்களாக மாற்றி, அதனை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து சார்ஜாவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 853 கிராம் எடை கொண்ட தங்க துகள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.26¼ லட்சம் ஆகும்.

இதுகுறித்து கைதான ஷாகினா சேக் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story