பால்குட ஊர்வலம்
பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் பால்குட பால்குட நடந்தது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆடி திருவிழாவையொட்டி சுந்தரராஜ பெருமாள் தனது சகோதரி செல்லியம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலி கயிறு, சேலை, ஜாக்கெட், பூ, பழம் உள்ளிட்ட சீர்வரிசைகளை மேளதாளம் முழங்க பஜனை கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பஜனை கோவிலில் இருந்து உற்சவருடன் பக்தர்கள் பால்குடங்களை சுமந்த வண்ணம் சீர்வரிசைகளை கையில் ஏந்தியவண்ணம் மணிவாசகம் தெரு, செட்டி தெரு, பெருமாள்கோவில் தெரு, ராஜா தெரு உள்ளிட்ட தெருக்களின் வழியாக செல்லியம்மன் கோவிலை சென்றடைந்தனர். பின்னர் செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story