கல்பாக்கம் பகுதியில் போலீசார் அதிரடி சாராய வேட்டை 115 லிட்டர் சாராயம் பறிமுதல்; 5 பேர் கைது


கல்பாக்கம் பகுதியில் போலீசார் அதிரடி சாராய வேட்டை 115 லிட்டர் சாராயம் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2018 3:49 AM IST (Updated: 4 Aug 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம் 

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி மது விலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு முகமது அஸ்லாம் தலைமையில் திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 4 மணியளவில் கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நெடுமரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (வயது45) என்பவரின் வீட்டில் 15 லிட்டர் சாராயமும், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு (37) என்பவரிடம் இருந்து 20 லிட்டர் எரிசாராயம், வாயலூர் கிராமத்தில் செல்வராஜ் (37) என்பவரிடம் 35 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

கூவத்தூர் கிராமத்தில் கண்ணாயிரம் (60) என்பவரிடம் 25 லிட்டர் சாராயமும், குழிப்பாந்தண்டலம் பகுதியில் ராஜி (39) என்பவரிடம் 20 லிட்டர் எரிசாராயமும் கைபற்றப்பட்டது. 5 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் சட்டவிரோதமாக மதுவிற்றதாக மேற்காண்டை கிராமத்தை சேர்ந்த பாக்கியம் (57) என்ற பெண்ணிடம் 10 பாட்டில்களும், லட்டூர் கிராமத்தில் சின்ன பொண்ணு (65) என்பவரிடம் 7 பாட்டில்களும், புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த பாப்பாத்தி (48) மற்றும் குமார் (35) ஆகியோரிடம் தலா 8 பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story