போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2018 3:53 AM IST (Updated: 4 Aug 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மகன் உமேஷ் (வயது 17). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு உமேஷ் மற்றும் சில மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக விப்பேடு கிராம மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் உமேஷ் மற்றும் சில மாணவர்களை காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து விடுவித்தனர். மேலும் இந்த மாணவர்கள் கஞ்சா விற்றதாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவியது.

தற்கொலை

போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனம் உடைந்த உமேஷ், நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விப்பேடு கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 

Next Story