ரூ.34 கோடியே 37 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி: இந்திப்பட இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தே கைது
ரூ.34 கோடியே 37 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதாக இந்தி பட இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
ரூ.34 கோடியே 37 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டதாக இந்தி பட இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குனர் கைது
இந்தியில் ‘‘தி ஆக்ஸி டென்டல் பிரைம் மினிஸ்டர்’’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் ரத்னகர் குத்தே என்பவர் இயக்கி வருகிறார். இதில் நடிகர் அனுபம் கேர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்காக நடிக்கிறார். படம் வருகிற டிசம்பர் 21-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரூ.34 கோடியே 37 லட்சம் வரி மோசடியில் ஈடுபட்டுள் ளதாக இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தேவை சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை மூத்த அதி காரி ஒருவர் கூறியதாவது:-
ரூ.34 கோடியே 37 லட்சம் மோசடி
இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தேக்கு சொந்தமாக வி.ஆர்.ஜி. டிஜிட்டல் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் எச்.ஒ.எஸ்.பி.எல். என்ற நிறுவனத்திடம் இருந்து எந்த சேவையும் பெறாமல் 149 போலி ரசீதுகளை தாக்கல் செய்து ரூ.34 கோடியே 37 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே எச்.ஒ.எஸ்.பி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விதிகளின்படி அரசுக்கு ஜி.எஸ்.டி. செலுத்தும் நிறுவனத்தினர் தாங்கள் வாங்கும் பொருட்கள், சேவைகளுக்கு செலுத்திய ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெறமுடியும். அந்த வகையில் தான் இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தேயின் நிறுவனம் போலி ரசீதுகளை தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இயக்குனர் விஜய் ரத்னகர் குத்தே ‘எமோஷனல் அத்தியாச்சார்’, ‘டைம் பாரா வைத்’, ‘பத்மஷியான்’ போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.
Related Tags :
Next Story