போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாத காவலாளிகளை பணி இடைநீக்கம் செய்த மாநகராட்சி அதிகாரிகள்


போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாத காவலாளிகளை பணி இடைநீக்கம் செய்த மாநகராட்சி அதிகாரிகள்
x
தினத்தந்தி 4 Aug 2018 5:30 AM IST (Updated: 4 Aug 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாத 4 காவலாளிகளை பணி இடைநீக்கம் செய்த அதிகாரிகளின் உத்தரவை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா ரத்து செய்தார்.

மும்பை, 

போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாத 4 காவலாளிகளை பணி இடைநீக்கம் செய்த அதிகாரிகளின் உத்தரவை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா ரத்து செய்தார்.

காவலாளிகள் பணி இடைநீக்கம்

மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பணி முடிந்து சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமையகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார். அப்போது மாநகராட்சி தலைமையகம் முன் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி உள்ளது. அந்த நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி கமிஷனரின் கார் செல்லும் வகையில் மாநகராட்சி காவலாளிகள் யாரும் உதவ முன் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த மாநகராட்சி பாதுகாப்பு துறை சம்பவத்தன்று மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கதவு எண் 2, 4, 5 மற்றும் 6-ல் பணியில் இருந்த 4 காவலாளிகளை பணி இடைநீக்கம் செய்தது.

ரத்து செய்த கமிஷனர்

இதையறிந்த மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா 4 காவலாளிகளின் பணி இடைநீக்க உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகராட்சி தலைமை அலுவலகம் முன் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை கமிஷனர் சந்தித்து வருகிறார். எனவே அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதே சரியாக இருக்கும். ஆனால் அதற்கு பதிலாக காவலாளிகளை இடைநீக்கம் செய்துள்ளனர். எனவே தான் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story