புழல்-செங்குன்றம் இணைப்பு சாலையில் மின்விளக்குகள் அதிகாரிகள் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
புழல்-செங்குன்றம் இணைப்பு சாலையில் மின்விளக்குகள் பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கவுதம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் முதல் செங்குன்றம் வரை உள்ள இணைப்பு சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இந்த இணைப்பு சாலையில் மின்விளக்குகள் எரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. புழல் சிறை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லை. இதனால் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story