ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி விபத்து பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் படுகாயம்


ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி விபத்து பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Aug 2018 3:15 AM IST (Updated: 5 Aug 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டையில் ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதியதில் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம்பரம்,

குரோம்பேட்டை, நேருநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மகள் வெண்மதி (வயது 23). இவர் பெருங்களத்தூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் குரோம்பேட்டை எம்.ஐ.டி பாலத்தில் ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது குரோம்பேட்டையில் இருந்து சானடோரியம் நோக்கி சென்ற ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

சிகிச்சை

இதில் நிலைதடுமாறி ஸ்கூட்டர் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் வெண்மதி மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த வெண்மதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story