வியாசர்பாடியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


வியாசர்பாடியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2018 10:15 PM GMT (Updated: 4 Aug 2018 7:14 PM GMT)

வியாசர்பாடியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 31-வது பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆகாயத்தாமரைகளும், இதே கழிவுநீர் கால்வாயில் வியாசர்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள காமராஜர் தெருவில் பிளாஸ்டிக் கழிவுகளும் ஆக்கிரமித்து உள்ளன.

இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் கால்வாயில் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

எனவே மழைக்காலத்துக்கு முன்பாகவே இந்த கழிவுநீர் கால்வாயில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, கால்வாயை தூர்வாரி கழிவுநீர் சீராக வெளியேற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story