டாக்டர்கள், நர்சுகள் தவிர வேறு யாராவது பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை


டாக்டர்கள், நர்சுகள் தவிர வேறு யாராவது பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள், நர்சுகள் தவிர வேறு யாராவது பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மருத்துவத் துறையில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சமூக வலைத்தளத்தை பார்த்து ஒரு சதவீதம் பேர், வீடுகளில் தவறான முறையில் பிரசவம் பார்த்து வருகின்றனர். இதுமாதிரி தேனி, திருப்பூர் மாவட்டங்களில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக இணை இயக்குனர் மூலமாக புகார் செய்யப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுவாக அனைவருமே அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் அடைகின்றனர். அவர்களை திசை திருப்பக்கூடிய இந்த நிகழ்வை கடுமையாக அரசு எதிர்க்கிறது. தமிழகம் வளர்ந்த, முன்னோடி மாநிலம். பிரசவத்தின் போது தாய்–குழந்தை இறப்பை குறைத்துள்ளோம். டாக்டர், நர்சுகள் தவிர வேறு யாரும் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி திட்டத்தை கொண்டு வரும்போது சிலர் வேண்டுமென்றே வி‌ஷம பிரசாரத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story