மாமல்லபுரம் கடற்கரையில் யோகாசனம் செய்த பிரான்ஸ் நாட்டு பயணிகள்


மாமல்லபுரம் கடற்கரையில் யோகாசனம் செய்த பிரான்ஸ் நாட்டு பயணிகள்
x
தினத்தந்தி 5 Aug 2018 2:19 AM IST (Updated: 5 Aug 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரையில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் யோகாசனம் செய்தனர்.

மாமல்லபுரம், 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனோதத்துவ நிபுணர் பைரன்ஜி டோம்னிக் என்பவர் தலைமையில், 40 பயணிகள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்த பிறகு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இந்தியர்களின் யோகாசன பயிற்சி முறையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனோதத்துவ நிபுணர் மற்ற பயணிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனையை ஏற்ற பயணிகள் யோகாசனம் கற்க விருப்பம் தெரிவித்தனர். தற்போது மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரையில் பிரான்ஸ் மனோதத்துவ நிபுணர் பிரான்ஸ் பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு யோகாசனம் அளிக்கும் பயிற்சியை தொடங்கினார். பயணிகள் தினமும் காலை, மாலை என இரு வேலைகளில் யோகாசனம் செய்யும் பயிற்சியை தொடங்கி உள்ளனர். நிகழ்ச்சியில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story