ரசாயனம் கலந்ததாக புகார் லட்சுமிசாகரா ஏரியில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்ற அதிகாரிகள்
ரசாயனம் கலந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின் எதிரொலியாக லட்சுமிசாகரா ஏரியில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
கோலார் தங்கவயல்,
ரசாயனம் கலந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின் எதிரொலியாக லட்சுமிசாகரா ஏரியில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
ரசாயனம் கலந்ததாக புகார்
கோலார் மாவட்டத்தில் உள்ள 126 ஏரிகளுக்கு நீர் நிரப்ப கே.சி.வேலி(பெங்களூரு-செல்லகட்டா) திட்டம் ரூ.140 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோலார் தாலுகா நரசாப்பூர் அருகே உள்ள லட்சுமிசாகரா ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் ஏரி தண்ணீரில் ரசாயனம் கலந்து இருப்பதாகவும், அந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் இறந்ததாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் கே.சி.வேலி குடிநீர் திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நிரந்தர குடிநீர் போராட்ட கமிட்டியினர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
ஆய்வுக்காக தண்ணீர் எடுத்து....
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கே.சி.வேலி குடிநீர் திட்டத்தின் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப இடைக்கால தடை விதித்தது. மேலும் லட்சுமிசாகரா ஏரியில் விடப்பட்ட தண்ணீரில் ரசாயனம் கலந்து உள்ளதா? அந்த நீரை பயன்படுத்தினால் ஏதாவது கெடு விளைவிக்குமா? அந்த தண்ணீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாமா? என்பது குறித்து கர்நாடக மாநில குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், சிறிய நீர்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் நேற்று லட்சுமி சாகரா ஏரிக்கு வந்த குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள், சிறிய நீர்பாசனத்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்து தண்ணீரை ஆய்வுக்காக குளிர்பதன பெட்டியில் வைத்து எடுத்து சென்றனர். ஆய்வு முடிந்ததும் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
Related Tags :
Next Story