சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறப்பு கோர்ட்டு விதித்த 10 ஆண்டு ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
மும்பை,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறப்பு கோர்ட்டு விதித்த 10 ஆண்டு ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
பாலியல் தொல்லை
புனேவை சேர்ந்தவர் ராஜேந்திர பீமா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பக்கத்து வீட்டு சிறுமியை தன்வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
மேலும் சிறுமியிடம் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளார். இதன்பின்னரும் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த சிறுமி சம்பவத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் அவர் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
10 ஆண்டு ஜெயில்
வழக்கு விசாரணையில் ராஜேந்திர பீமா மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டில், தான் குற்றமற்றவன் என்றும், தன்மீது உள்ள முன்பகையால் அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதல் காரணமாக சிறுமியின் குடும்பம் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியாவில் எந்த ஒரு பெற்றோரும், பகையின் காரணமாக தங்கள் குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக பொய் புகார் அளிக்க மாட்டார்கள் என கூறி ராஜேந்திர பீமாவின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அவருக்கு சிறப்பு கோர்ட்டு அளித்த தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story