செம்பூர் - வடலா இடையே செப்டம்பர் 1-ந் தேதி முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிவிப்பு


செம்பூர் - வடலா இடையே செப்டம்பர் 1-ந் தேதி முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

செம்பூர் - வடலா இடையே அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிவித்து உள்ளது.

மும்பை, 

செம்பூர் - வடலா இடையே அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. அறிவித்து உள்ளது.

மோனோ ரெயில்

மும்பையில் கடந்த 2014-ம் ஆண்டு நாட்டிலேயே முதன்முறையாக மோனோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோனோ ரெயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, மேனோ ரெயில் சேவை அடியோடு நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 9 மாதமாகியும் இன்னும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. ஆகஸ்டு 15-ந் தேதிக்கு பின்னர் மோனோ ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு இருக்கலாம் என பெருநகர வளர்ச்சிக் குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், செம்பூர் - வடலா இடையே அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் மீண்டும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. தெரிவித்து உள்ளது.

1-ந் தேதி முதல் சேவை

இதுபற்றி எம்.எம்.ஆர்.டி.ஏ. இணை திட்ட இயக்குனர் திலிப் கவாத்கர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதமே மோனோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போனது.

செப்டம்பர் 1-ந் தேதி முதல் செம்பூர் - வடலா இடையே மீண்டும் ேமானோ ரெயில் ேசவை தொடங்கப்படும். அதன்பின்னர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடலா - ஜேக்கப் சர்க்கிள் இடையே சேவை தொடங்கப்படும் என்றார்.

Next Story