ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவி படுகொலை நடுரோட்டில் வழிமறித்து தீர்த்து கட்டியவர் கைது
தானேயில் ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவியை நடுரோட்டில் வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தானேயில் ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவியை நடுரோட்டில் வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி கொலை
தானே கோப்ரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பிராச்சி சாடே (வயது21). நேற்று காலை 10.30 மணியளவில் இவர் ஸ்கூட்டரில் கோட்பந்தர்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். தானே வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் மாணவியின் ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தினார்.
பின்னர் அவர் தான் வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து இறந்து போனார்.
பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலையை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில், அவரை கொலை செய்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கொலை செய்த வாலிபரை பிவண்டி நார்போலி பகுதியில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பிவண்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் பவார் (வயது25) என்பது தெரியவந்தது. காதல் பிரச்சினையில் கல்லூரி மாணவியை அவர் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story