மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய மலைப்பாம்பு


மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய மலைப்பாம்பு
x
தினத்தந்தி 5 Aug 2018 5:00 AM IST (Updated: 5 Aug 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

மும்பை, 

மேற்கு விரைவு சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.

மலைப்பாம்பு

மும்பை பெருநகரத்தின் பிரதான போக்குவரத்து சாலைகளில் ஒன்றான மேற்கு விரைவு சாலையில் தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் நேற்று முன்தினம் ஒரு மலைப் பாம்பால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேற்கு விரைவு சாலையின் போரிவிலி பகுதியில் உள்ள சாந்திவன் பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள காலை நேரத்தில் சாலையின் குறுக்கே சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினார்கள்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

மீட்டனர்

இந்த நிலையில், இதுகுறித்த தகவல் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. வன ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அதற்குள் மலைப்பாம்பு பாலத்தில் உள்ள துவாரத்தில் சென்று ஒளிந்து கொண்டது. ஒருவழியாக போராடி அவர்கள் அந்த பாம்பை மீட்டு சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

Next Story