கட்டுமான அதிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த சிவசேனா கவுன்சிலரின் கணவர் கைது


கட்டுமான அதிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த சிவசேனா கவுன்சிலரின் கணவர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 5:30 AM IST (Updated: 5 Aug 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான அதிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த சிவசேனா கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தானே, 

கட்டுமான அதிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறித்த சிவசேனா கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பணம் கேட்டு மிரட்டல்

தானே மாவட்டம் கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சியில் கல்யாண் கிழக்கு பக்வான் நகர் பகுதியை சேர்ந்த சிவசேனா பெண் கவுன்சிலர் சரிகா ஜாதவ். இவரது கணவர் சதீஷ் ஜாதவ்.

இவரும், அவரது தம்பி ஜூக்னு ஜாதவ் என்பவரும் அந்த பகுதியை சேர்ந்த கட்டுமான அதிபர் வினோத் பவாசே என்பவரின் ஒரு கட்டிடத்தின் மீது சட்டவிரோதமாக செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருவதாக கூறி, இது தொடர்பாக மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

கவுன்சிலரின் கணவர் கைது

இதனால் பயந்து போன கட்டுமான அதிபர் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர். பின்னர் கட்டுமான அதிபர் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கொடுத்த யோசனையின்படி நேற்று முன்தினம் மாலை கல்யாணில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பணத்தை வாங்க வரும்படி அண்ணன், தம்பி இருவரையும் கட்டுமான அதிபர் வினோத் பவாசே அழைத்தார்.

இதன்பேரில் இருவரும் அங்கு வந்து பணத்தை வாங்கினார்கள்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப் பட்டனர்.

Next Story