பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடி நிறுவனத்தின் மூத்த நிர்வாகிக்கு ஜாமீன் சிறப்பு கோர்ட்டு உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடி நிறுவனத்தின் மூத்த நிர்வாகிக்கு ஜாமீன் சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2018 5:30 AM IST (Updated: 5 Aug 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி விபுல் அம்பானிக்கு ஜாமீன் வழங்கி மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை, 

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி விபுல் அம்பானிக்கு ஜாமீன் வழங்கி மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் மோசடி தொடர்பாக நிரவ் மோடியின் பையர் ஸ்டார் வைர நிறுவனத்தின் மூத்த நிர்வாகி விபுல் அம்பானியை சி.பி.ஐ. போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

சமீபத்தில் இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நிபந்தனை ஜாமீன்

இந்த நிலையில் விபுல் அம்பானி மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே தன்னை சிறையில் அடைத்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை. எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, ரூ.1 லட்சம் பிணை ஜாமீனில் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

மேலும் அனுமதியின்றி வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது, வழக்கின் ஆதாரங்களை அழிக்க முயற்சிக்க கூடாது என்று விபுல் அம்பானிக்கு கோர்ட்டு நிபந்தனை விதித்தது.

Next Story