அந்துபூச்சி ராணி
அழிந்து வரும் பூச்சி இனங்களுள் ஒன்றாக இருக்கும் அந்து பூச்சிகளை பாதுகாக்கும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார், சுபலட்சுமி.
‘‘மற்ற பூச்சி இனங்களை விட மகரந்த சேர்க்கை மூலம் தாவரங்கள் பூத்து குலுங்கி காய் காய்ப்பதற்கு அந்துபூச்சியின் பங்களிப்பு முதன்மையானது. வண்ணத்து பூச்சிகளை காட்டிலும் இவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது வேதனை அளிக்கிறது’’ என்கிறார், அவர்.
சுபலட்சுமி மும்பையை சேர்ந்தவர். இயற்கை மீது நேசம் கொண்ட இவர் வண்ணத்துப்பூச்சி வகை இனத்தை சேர்ந்த அந்துப்பூச்சிகளின் சிறப்புகள் பற்றியும், அவை ஏன் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை விவரித்தும் புத்தகம் எழுதி இருக்கிறார். அந்துப்பூச்சிகளின் வாழ்வியலை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
‘‘உலகளவில் 1 லட்சத்து 42 ஆயிரம் அந்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் 12 ஆயிரம் அந்து பூச்சி இனங்கள் இருக்கின்றன. அவற்றின் நிறங்களும் வடிவங்களும் திகைப்பூட்டும் ரகத்தை சேர்ந்தவை. இவை வெப்ப மண்டல பிரதேசங்களில் அதிகம் உலா வருகின்றன. பசுமை சூழ்ந்த வனப்பகுதிகள்தான் இவற்றின் பிறப்பிடம். இந்தியாவில் வடகிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் தென்படுகின்றன. ஓலெண்டர், ஹாக்மோத் போன்ற சில இன அந்துப்பூச்சிகள் காடுகளை விட நகர, கிராமப்பகுதிகளில்தான் அதிகமாக காணப் படுகின்றன. அவை இரவு நேரங்களில் வீடுகளை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். தாவரங்களில் மகரந்தச்சேர்க்கைக்கு வித்திடுவதன் மூலம் பறவைகள், வவ்வால்கள் மற்றும் மனித இனத்திற்கான உணவு உற்பத்திக்கு அந்துப்பூச்சிகள் உதவுகின்றன’’ என்கிறார்.
சுபலட்சுமி 10 ஆண்டுகளாக அந்துப்பூச்சி இனங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். மருத்துவராக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருந்திருக்கிறது. அது கைகூடாத நிலையில் அந்துபூச்சிகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
‘‘சிறுவயதில் பூச்சிகளை பார்த்தால் பயந்து போய்விடுவேன். என் அம்மாதான் அந்த பயத்தை போக்கினார். பள்ளிப் பருவத்தில் அறிவியல் பாடம் பிடித்தமானதாக இருந்ததால் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை. ஆனாலும் பி.எச்டி படித்தாவது டாக்டராகிவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.
கல்லூரி படிப்பின்போதே ‘பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’ அமைப்பில் மாணவ உறுப்பினராக சேர்ந்தேன். பி.எஸ்சி. படித்து முடித்ததும் அங்கு ஊழியராக பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு கிடைத்த தொடர்புகள் எனது முதுகலைப்படிப்பிற்கும், பி.எச்டி. படிப்புக்கும் உதவியாக அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு வண்ணத்துப்பூச்சுகள் மீதுதான் ஈர்ப்பு இருந்தது. அந்துபூச்சி இனத்தை பற்றி கேள்விப்பட்டதும் அவை பற்றிய தகவல் களை திரட்ட தொடங்கினேன். இந்தியாவில் உள்ள அந்துப்பூச்சி இனங்கள் பற்றி முழுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். பின்பு அதிலே மூழ்கிப் போய்விட்டேன்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணமும் ஏற்பட்டது. அதற்காக அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறேன். ஏராளமானோர் என்னுடன் இணைந்து களப்பணியாற்றுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் குழந்தை களிடம் இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்க ளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். பறவையினங்கள், வன விலங்குகளை புகைப்படம் எடுப்பது, தோட்டக்கலையில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் குழந்தை கள் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும்’’ என்கிறார்.

Related Tags :
Next Story