ரத்தத்திற்கு ஏற்றது வெல்லம்
சீரான ரத்த ஓட்டம் உடலியக்கத்திற்கு மிக அவசியம்.
சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவு பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது. அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது.
நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவுவகைகள்!
* உடலில் உள்ள நச்சுக் களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப் பானாக பிராக்கோலி விளங் குகிறது. இது காய்கறி வகையை சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக் களை நீக்கவும் பிராக் கோலி உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.
* ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப் பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.
* தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுதாதயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.
* ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தை காக்க உதவும்.
* கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.
* பீட்ரூட் சாறு இயற்கை யாகவே உடலில் நச்சுத் தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டா கவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.
* சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது சிறந்தது. இதில் இரும்பு சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தையும் சீராக பராமரிக்கவும், ரத்தத்தை தூய்மைப் படுத்தவும் வெல்லம் உதவுகிறது.
* குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளி யேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.
* முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன. ரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைக ளுக்கும் தீர்வு காணலாம்.
Related Tags :
Next Story