மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. பணம் சம்பாதிக்கலாம்..
மீன்களை வளர்ப்பது மற்றும் அவைகளை பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயாரிப்பது மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
தொழில்ரீதியாக செய்ய விரும்புகிறவர்கள் முதலி்ல் மீன்களை பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மீன்களை பற்றி பலரும் அறியாத தகவல்கள் நிறைய இருக்கின்றன. அவை ஆச்சரியமளிக்கும் தகவல்களாகவும் இருக்கின்றன. அவை இங்கே தொகுத்து தரப்படுகின்றன.
இந்தியாவில் கடற்கரை 8118 கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 9, கடற்கரை மாநிலங்களையும், 4 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கி காணப்படுகிறது. இந்தியாவின் வரையறைக்குட்பட்ட பொருளாதார மீன்பிடி பகுதி 200 நாட்டிகல்(372 கி.மீ.) மைல்களுக்குட்பட்டது. இது 2.02 மில்லியன் கி.மீ. வரை விரிந்து காணப்படுகிறது.
இதில் மேற்கு கடற்கரையானது 0.86 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவும், கிழக்கு கடற்கரை 0.56 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 0.53 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. இவற்றிலிருந்து ஆண்டுக்கு தோராயமாக 4.10 மில்லியன் டன் கடல் மீன்கள் பிடிக்கப்படுகிறது. அதனால் இந்திய நாட்டின் வளங்களில் மீன்வளமும் குறிப்பிடத்தக்கது.
மீன்கள் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு தமது உடலின் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் தன்மையை பெற்றிருந்தாலும், சூரை, மயில் மீன், கானாங் கெளுத்தி மற்றும் சுறா மீன்களின் சில வகைகள் மாறுபட்ட வெப்பநிலையை உடையவையாக உள்ளன. மீன்கள் நீர்வாழ் உயிரினங் களாக இருப்பினும் விரால் மீன்கள் மற்றும் மரம் ஏறி கெண்டைகள் நீருக்கு வெளியில் வளிமண்டல உயிர்வளியை சுவாசித்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து உயிர் வாழும் தன்மை உடையவை.
மீன்களின் உணவுப்பாதை அதன் உணவுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அனைத்துண்ணி மீன்களுக்கு அதன் குடல் ஒரு பை போன்றும், விலங்குண்ணி மீன்களுக்கு குட்டையாகவும் மற்றும் தாவர உண்ணி மீன்களுக்கு நீண்டும் மற்றும் சுருண்டும் உள்ளன. உலகில் அதிகமாக பிடிக்கப்படும் மீன்களில் நெத்திலி மீன்கள் முதல் இடத்தை வகிக்கிறது.
நீரின் மேல்மட்டத்தில் வாழும் சாளை போன்ற மீன்களில், நீரின் அடித்தளத்தில் வாழும் மீன்களை விட கொழுப்பு சத்து மிகுதியாக உள்ளது. உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட ஸ்டர்ஜியன் என்ற மீனின் முட்டைகள் கேவியர் என்று அழைக்கப்படுகிறது. இவை அதிக விலையுடைய கடல் உணவுகளில் ஒன்றாகும். ஈரான் நாடு இந்த பதப்படுத்தப்பட்ட முட்டைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. சுறா மீன்களின் துடுப்புகளுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் அதிக விலைமதிப்பு உள்ளது.
நன்னீர் மீன்களின் மொத்த உடல் எடையில் அதன் காற்றுப்பைகள் 7 சதவீதம் இருக்கிறது. கடல்வாழ் மீன்களில் அது 5 சதவீதமாக இருக்கிறது. இந்த காற்றுப்பைகளிலிருந்து ஐசிங்கிளாஸ் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது. இவை பீர் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத மீன்களும், 18.2 சதவீத மெல்லுடலிகளும், 20.25 சதவீத கடற்பாசிகளும், 1.6 சதவீத ஓட்டுடலிகளும் நீர்நிலைகளில் வளர்க்கப்படுகின்றன. மீன்வளர்ப்பிற்கு சாதாகெண்டை, சீனப் பெருங்கெண்டைகள் மற்றும் இந்தியப் பெருங்கெண்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 80 சதவீத அளவுக்கு வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் 88 சதவீத மீன்களும், 8 சதவீத மெல்லுடலிகளும் மற்றும் 4.1 சதவீத ஓட்டுடலிகளும் பிடிக்கப்படுகின்றன. உலக நீர்வாழ் உயிரின உற்பத்தியில் மீன், மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுடலிகள் பெரும்பாலும் நன்னீர் நிலைகளில் வளர்க்கப்படுகின்றன. சுமார் 57.7 சதவீத உற்பத்தி நன்னீர் நிலைகளில் இருந்தும், 36.5 சதவீதம் கடல் நீர் நிலைகளிலிருந்தும், 5.8 சதவீதம் உவர்நீர் நிலைகளிலிருந்தும் பெறப்படுகின்றன. (கடல் நீரும், ஆற்று நீரும் கலக்கும் இடத்தில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதை தான் உவர் நீர் என்று சொல்கிறோம். நத்தை, சிப்பி, சங்கு போன்ற இனங்களை மெல்லுடலி என்றும், நண்டு, இறால் போன்றவைகளை ஓட்டுடலி என்றும் அழைக்கிறோம்). உலக மீனவர் தினம் நவம்பர் 21-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
25 சதவீதத்துக்கும் மேலான மீன் இனங்கள் தங்களது குஞ்சுகளை பெற்றோர் போன்று பேணிகாக்கும் தன்மை உடையன. சில வகையான நன்னீர் மீன் இனங்கள் தன் குஞ்சுகளை வலைகள்போல் அமைத்து சிறப்பான முறையில் பாதுகாக்கிறது. மீன்களில் பெரும்பாலும் ஆண் இனங்கள் பாதுகாக்கும் தன்மையை பெற்றிருக்கும்.
இந்தியாவில் 300 வகையான வெளிநாட்டு மீன் இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவைகள் பெரும்பாலும் அலங்கார மீன் இனங்களாகும். மீன்கள் சில வித்தியாசமான பெயர்களால் அழைக்கப்படுகிறது. மேக்ரல் என்பது டேனிஸ் மொழி வார்த்தை. அது புள்ளி என்ற பொருளுடையது. அயிலை மீன்களின் பக்கவாட்டில் புள்ளிகள் காணப்படுவதால் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.
சால்மோன் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு குதிக்கும் மீன்கள் என்று பொருள். இவை கல் மற்றும் சிறு தடைகளை குதித்து கடப்பதன் காரணமாக இப்பெயர் பெற்றிருக்கலாம். ட்ரவுட் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு பசி மீன் என்று பொருள். இவை அதிகமாக உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
உலகிலேயே அதிக வேகம் கொண்டது, இந்தோ-பசிபிக் மயில் மீன்கள். அவை மணிக்கு 110 கி.மீ. தூரம் செல்லக் கூடியவை. 3.4 மீ. நீளம் வரை வளரும் இவைகள், சுமார் 100 கிலோ எடை உடையவை. உலகில் மிகப்பெரிய மீன், திமிங்கல சுறாவாகும். 4 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை இவை வளரக் கூடியவை. 18 மீட்டர் வரையிலும் வளர்ந்த திமிங்கல சுறாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறை பகுதிகளில் காணப்படும் கோபி என்ற மிகச்சிறிய மீன் வகைகள், முதுகுத் தண்டுவட உயிரினங்களில் மிகக்குறைந்த நாட்களே (59 நாட்கள்) வாழக்கூடியவை. கஸ்கில் என்ற மீன்கள் மிக ஆழமான பகுதியிலும் உயிர் வாழ்பவை. 20 செ.மீ. நீளம் கொண்ட இவைகள் 8 ஆயிரத்து 370 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை.
90 சதவீதத்துக்கும் மேலான ஆழ்கடல் மீன்கள் 700 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளி இல்லாத பகுதியில் வசிக்கிறது. இவ் வகையான மீன்கள் பெரும்பாலும் ஒளியை உண்டாக்கும் உறுப்புகளை பெற்றுள்ளன. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், இரை மற்றும் தன் துணையை கவரவும் அவை உதவுகின்றன.
மின்சார மீன்கள்
சில வகையான மீன்கள் பலமான 20 முதல் 600 வோல்ட் வரையிலான மின்சார கற்றைகளை உருவாக்குகிறது. அம்மீன்களில் உள்ள லெக் ரோசைட் என்ற செல்களிலிருந்து இவ்வகையான மின்சாரம் உருவாகிறது. தென் அமெரிக்காவில் உள்ள கத்தி மீன்கள் மற்றும் சில வகையான கெளுத்தி மீன்கள், யானை மீன்கள் போன்றவை மின்சாரத்தை உருவாக்கும் திறன் உடையவை. சயினிடே குடும்பத்தைச் சேர்ந்த பன்னா மற்றும் கத்தாளை மீன்கள் நீரின் அடியில் ஒருவிதமான ஒலியை ஏற்படுத்தும் தன்மையை உடையவை.
(தொடரும்)
கட்டுரை: பேராசிரியர் மு.நாகூர்மீரான், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

மீன்கள் கண்களை கவரும் விதத்தில் பல்வேறு வடிவங்களையும், பலவிதமான நிறங்களையும் கொண்டவை. சுற்றுப்புறத்தின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவை. அவற்றின் செவுள்கள் தலைமை சுவாச உறுப்புகளாக செயல்படுகிறது. அவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டிருக்கிறது. சுறாக்கள், திருக்கை மீன்கள் போன்றவை குருத்தெலும்பு கொண்டவை.
மீன்கள் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு தமது உடலின் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் தன்மையை பெற்றிருந்தாலும், சூரை, மயில் மீன், கானாங் கெளுத்தி மற்றும் சுறா மீன்களின் சில வகைகள் மாறுபட்ட வெப்பநிலையை உடையவையாக உள்ளன. மீன்கள் நீர்வாழ் உயிரினங் களாக இருப்பினும் விரால் மீன்கள் மற்றும் மரம் ஏறி கெண்டைகள் நீருக்கு வெளியில் வளிமண்டல உயிர்வளியை சுவாசித்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து உயிர் வாழும் தன்மை உடையவை.
மீன்களின் உணவுப்பாதை அதன் உணவுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அனைத்துண்ணி மீன்களுக்கு அதன் குடல் ஒரு பை போன்றும், விலங்குண்ணி மீன்களுக்கு குட்டையாகவும் மற்றும் தாவர உண்ணி மீன்களுக்கு நீண்டும் மற்றும் சுருண்டும் உள்ளன. உலகில் அதிகமாக பிடிக்கப்படும் மீன்களில் நெத்திலி மீன்கள் முதல் இடத்தை வகிக்கிறது.
நீரின் மேல்மட்டத்தில் வாழும் சாளை போன்ற மீன்களில், நீரின் அடித்தளத்தில் வாழும் மீன்களை விட கொழுப்பு சத்து மிகுதியாக உள்ளது. உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட ஸ்டர்ஜியன் என்ற மீனின் முட்டைகள் கேவியர் என்று அழைக்கப்படுகிறது. இவை அதிக விலையுடைய கடல் உணவுகளில் ஒன்றாகும். ஈரான் நாடு இந்த பதப்படுத்தப்பட்ட முட்டைகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. சுறா மீன்களின் துடுப்புகளுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் அதிக விலைமதிப்பு உள்ளது.
மீன் எண்ணெய்யில் ஒமேகா 3 என்ற நிறைவுறா கொழுப்பு அமிலம் உள்ளது. இது மனித உடம்பில் கொழுப்பு சேர்வதை தடுப்பதுடன், கண் பார்வைக்கும், ரத்த அழுத்த நோயை தடுப்பதற்கும் மற்றும் இதய நோய்களை தடுப்பதற்கும் பயன் படுகிறது. கைட்டின், கைட்டோசைமன் மற்றும் குளுக் கோசைமன் போன்றவை இறால் மற்றும் நண்டு ஓடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை தொழில் மற்றும் மருத்துவ துறைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
நன்னீர் மீன்களின் மொத்த உடல் எடையில் அதன் காற்றுப்பைகள் 7 சதவீதம் இருக்கிறது. கடல்வாழ் மீன்களில் அது 5 சதவீதமாக இருக்கிறது. இந்த காற்றுப்பைகளிலிருந்து ஐசிங்கிளாஸ் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது. இவை பீர் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 60 சதவீத மீன்களும், 18.2 சதவீத மெல்லுடலிகளும், 20.25 சதவீத கடற்பாசிகளும், 1.6 சதவீத ஓட்டுடலிகளும் நீர்நிலைகளில் வளர்க்கப்படுகின்றன. மீன்வளர்ப்பிற்கு சாதாகெண்டை, சீனப் பெருங்கெண்டைகள் மற்றும் இந்தியப் பெருங்கெண்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை 80 சதவீத அளவுக்கு வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் 88 சதவீத மீன்களும், 8 சதவீத மெல்லுடலிகளும் மற்றும் 4.1 சதவீத ஓட்டுடலிகளும் பிடிக்கப்படுகின்றன. உலக நீர்வாழ் உயிரின உற்பத்தியில் மீன், மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுடலிகள் பெரும்பாலும் நன்னீர் நிலைகளில் வளர்க்கப்படுகின்றன. சுமார் 57.7 சதவீத உற்பத்தி நன்னீர் நிலைகளில் இருந்தும், 36.5 சதவீதம் கடல் நீர் நிலைகளிலிருந்தும், 5.8 சதவீதம் உவர்நீர் நிலைகளிலிருந்தும் பெறப்படுகின்றன. (கடல் நீரும், ஆற்று நீரும் கலக்கும் இடத்தில் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். அதை தான் உவர் நீர் என்று சொல்கிறோம். நத்தை, சிப்பி, சங்கு போன்ற இனங்களை மெல்லுடலி என்றும், நண்டு, இறால் போன்றவைகளை ஓட்டுடலி என்றும் அழைக்கிறோம்). உலக மீனவர் தினம் நவம்பர் 21-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
25 சதவீதத்துக்கும் மேலான மீன் இனங்கள் தங்களது குஞ்சுகளை பெற்றோர் போன்று பேணிகாக்கும் தன்மை உடையன. சில வகையான நன்னீர் மீன் இனங்கள் தன் குஞ்சுகளை வலைகள்போல் அமைத்து சிறப்பான முறையில் பாதுகாக்கிறது. மீன்களில் பெரும்பாலும் ஆண் இனங்கள் பாதுகாக்கும் தன்மையை பெற்றிருக்கும்.
இந்தியாவில் 300 வகையான வெளிநாட்டு மீன் இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவைகள் பெரும்பாலும் அலங்கார மீன் இனங்களாகும். மீன்கள் சில வித்தியாசமான பெயர்களால் அழைக்கப்படுகிறது. மேக்ரல் என்பது டேனிஸ் மொழி வார்த்தை. அது புள்ளி என்ற பொருளுடையது. அயிலை மீன்களின் பக்கவாட்டில் புள்ளிகள் காணப்படுவதால் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.
சால்மோன் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு குதிக்கும் மீன்கள் என்று பொருள். இவை கல் மற்றும் சிறு தடைகளை குதித்து கடப்பதன் காரணமாக இப்பெயர் பெற்றிருக்கலாம். ட்ரவுட் என்பது லத்தீன் மொழி வார்த்தை. இதற்கு பசி மீன் என்று பொருள். இவை அதிகமாக உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
உலகிலேயே அதிக வேகம் கொண்டது, இந்தோ-பசிபிக் மயில் மீன்கள். அவை மணிக்கு 110 கி.மீ. தூரம் செல்லக் கூடியவை. 3.4 மீ. நீளம் வரை வளரும் இவைகள், சுமார் 100 கிலோ எடை உடையவை. உலகில் மிகப்பெரிய மீன், திமிங்கல சுறாவாகும். 4 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை இவை வளரக் கூடியவை. 18 மீட்டர் வரையிலும் வளர்ந்த திமிங்கல சுறாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறை பகுதிகளில் காணப்படும் கோபி என்ற மிகச்சிறிய மீன் வகைகள், முதுகுத் தண்டுவட உயிரினங்களில் மிகக்குறைந்த நாட்களே (59 நாட்கள்) வாழக்கூடியவை. கஸ்கில் என்ற மீன்கள் மிக ஆழமான பகுதியிலும் உயிர் வாழ்பவை. 20 செ.மீ. நீளம் கொண்ட இவைகள் 8 ஆயிரத்து 370 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை.
90 சதவீதத்துக்கும் மேலான ஆழ்கடல் மீன்கள் 700 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளி இல்லாத பகுதியில் வசிக்கிறது. இவ் வகையான மீன்கள் பெரும்பாலும் ஒளியை உண்டாக்கும் உறுப்புகளை பெற்றுள்ளன. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், இரை மற்றும் தன் துணையை கவரவும் அவை உதவுகின்றன.
மின்சார மீன்கள்
சில வகையான மீன்கள் பலமான 20 முதல் 600 வோல்ட் வரையிலான மின்சார கற்றைகளை உருவாக்குகிறது. அம்மீன்களில் உள்ள லெக் ரோசைட் என்ற செல்களிலிருந்து இவ்வகையான மின்சாரம் உருவாகிறது. தென் அமெரிக்காவில் உள்ள கத்தி மீன்கள் மற்றும் சில வகையான கெளுத்தி மீன்கள், யானை மீன்கள் போன்றவை மின்சாரத்தை உருவாக்கும் திறன் உடையவை. சயினிடே குடும்பத்தைச் சேர்ந்த பன்னா மற்றும் கத்தாளை மீன்கள் நீரின் அடியில் ஒருவிதமான ஒலியை ஏற்படுத்தும் தன்மையை உடையவை.
(தொடரும்)
கட்டுரை: பேராசிரியர் மு.நாகூர்மீரான், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்
Related Tags :
Next Story