பாதை பிரச்சினையால் கோஷ்டி மோதல்; தந்தை–மகன் உள்பட 4 பேர் காயம் 2 பேர் கைது


பாதை பிரச்சினையால் கோஷ்டி மோதல்; தந்தை–மகன் உள்பட 4 பேர் காயம் 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 3:45 AM IST (Updated: 5 Aug 2018 10:37 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே பாதை பிரச்சினையால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தந்தை–மகன் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகேஉள்ள மருதங்கோட்டில் பாதை பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர்களிடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. வாய்தகராறு முற்றிய நிலையில் இருதரப்பினரும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் மோதிக்கொண்டனர்.

இந்த கோஷ்டி மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த பினு (வயது 40) மற்றும் அவரது மகன் ஜோயுலால் (8) ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மற்றொரு பிரிவை சேர்ந்த ராமையன் (60), மகேஷ் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது சம்பவம் குறித்து இருதரப்பினரும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் ஒரு தரப்பை சேர்ந்த பினு, வில்சன், பிபின் ஆகிய 3 பேர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த ராமையன், மகேஷ், அனிஷ் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் வில்சன், அனிஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story