மாவட்ட செய்திகள்

கோவை அருகே பரிதாபம்: பேரூர் பெரிய குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு + "||" + The boy dies in the pool

கோவை அருகே பரிதாபம்: பேரூர் பெரிய குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

கோவை அருகே பரிதாபம்: பேரூர் பெரிய குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
கோவை அருகே உள்ள பேரூர் பெரிய குளத்தில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

பேரூர்,

கோவை பூ மார்க்கெட் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் முரளி (வயது 48). இவருடைய மகன் ரஞ்சித் (16). கோவையில் உள்ள லேத்தில் வேலை பார்த்து வந்தான். இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் ரஞ்சித் தனது நண்பர்கள் 8 பேருடன் கோவை புட்டுவிக்கி அருகே உள்ள பேரூர் பெரியகுளத்தில் குளிக்க சென்றார். பின்னர் அவர்கள் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ரஞ்சித் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் எதிர்பாராதவிதமாக அவர் நீரில் தத்தளித்தபடி மூழ்கினார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ரஞ்சித்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அதற்குள் ரஞ்சித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு பேரூர் பெரிய குளம் நிரம்பி உள்ளது. எனவே குளத்தில் பாதுகாப்பான அறிந்து அதில் இறக்க பொதுமக்கள் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.தொடர்புடைய செய்திகள்

1. வானூர் அருகே பரிதாபம்: பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி சாவு
வானூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு 9 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.
2. கிண்டியில் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது பிளஸ்–1 மாணவர் பலி
கிண்டியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியின்போது பிளஸ்–1 மாணவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
3. கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலி
கல்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.
4. காமநாயக்கன்பாளையம் அருகே வேன்–மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
காமநாயக்கன்பாளையம் அருகே வேனும் –மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ்–2 மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
5. கபிஸ்தலம் காவிரி ஆற்றில் மூழ்கிய மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்பு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது
கபிஸ்தலம் காவிரி ஆற்றில் மூழ்கிய மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இது அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.