தார்டுதேவ் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து கோப்புகள் எரிந்து நாசம்


தார்டுதேவ் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து கோப்புகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 6 Aug 2018 5:45 AM IST (Updated: 6 Aug 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

தார்டுதேவ் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்து நாசமாகின.

மும்பை,

தார்டுதேவ் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்து நாசமாகின.

பயங்கர தீ விபத்து

மும்பை தார்டுதேவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை சுமார் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.

கோப்புகள், பொருட்கள் எரிந்தன

இந்த பயங்கர தீ விபத்தில் மின் வயர், ஓட்டுனர் உரிமங்கள், ஆவணங்கள், கோப்புகள், நாற்காலிகள், கணினிகள், பிரின்டர், சுமார் 20 மேஜைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் யாரும் இல்லை. எனவே இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.

எனினும் விபத்திற்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story