குழந்தையுடன் ஆற்றில் குதித்த பெண் சடலம் 32 நாட்கள் பின்னர் ஒதுங்கியது


குழந்தையுடன் ஆற்றில் குதித்த பெண் சடலம் 32 நாட்கள் பின்னர் ஒதுங்கியது
x
தினத்தந்தி 6 Aug 2018 3:00 AM IST (Updated: 6 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப பிரச்சினையில் குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த பெண்ணின் உடல் 32 நாட்களுக்குப்பின் கரை ஒதுங்கியது.

மூணாறு, 



மூணாறை அடுத்த பெரியபாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26). இவருடைய மனைவி சிவரஞ்சனி (24). இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சிவரஞ்சனி கணவரிடம் கோபித்துக் கொண்டு அருகே உள்ள ஆற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அவரை காப்பாற்றுவதற்காக விஷ்ணுவும் ஆற்றில் குதித்தார். கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மூணாறு போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் அவர்களை தேடி வந்தனர்.


இந்நிலையில் 32 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பழைய மூணாறு ஹெட் ஒர்க்ஸ் அணை அருகே உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் சிவரஞ்சனியின் உடல் மட்டும் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு மூணாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். ஆனால் விஷ்ணு மற்றும் அவருடைய குழந்தையின் உடலை தேடி வருகின்றனர்.

Next Story