மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித்தொழிலாளி சாவு + "||" + Collision with motorcycles; Wage laborer death

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித்தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித்தொழிலாளி சாவு
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் கூலித்தொழிலாளி பலியானர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் திம்மசமுத்திரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தார். காஞ்சீபுரம் அருகே வெள்ளைகேட் சாலையில் சென்றபோது, தட்சிணாமூர்த்தி மோட்டார் சைக்கிளும் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

இதில் தட்சிணாமூர்த்தி படுகாயங்களுடன், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ், அவரது மனைவி நிஷா ஆகியோர் படுகாயங்களுடன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.