அணுசக்தி மையத்தில் 224 வேலைகள்


அணுசக்தி மையத்தில் 224 வேலைகள்
x
தினத்தந்தி 6 Aug 2018 8:01 AM GMT (Updated: 6 Aug 2018 8:01 AM GMT)

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 224 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மும்பையில் செயல்படுகிறது. மத்திய அரசு நிறுவனமாக இதில் தற்போது ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கேட்டகரி 1 பிரிவில் 86 இடங்களும், கேட்டகரி 2 பிரிவில் 138 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

கேட்டகரி 1 பணி விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். கேட்டகரி 2 பணி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 22 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள் கேட்டகரி 1 பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் கேட்டகரி 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

கேட்டகரி 1 பணி விண்ணப்பதாரர்கள் ரூ.150-ம், கேட்டகரி 2 பணி விண்ணப்பதாரர்கள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும்் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.barc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story